வெப்துனியா செய்தி எதிரொலி - அதிரடியாக களம் இறங்கிய நடிகர் விஜய்

வெப்துனியா செய்தி எதிரொலி - அதிரடியாக களம் இறங்கிய நடிகர் விஜய்

கே.என்.வடிவேல்
திங்கள், 9 மே 2016 (23:15 IST)
வெப்துனியா டாட் காம் இணையதளம் செய்தி எதிரொலியாக, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
 

 
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் அதன் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, மேலும், திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனால், நடிகர் விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கி இருப்பது திமுகவுக்கு பெரிதும் சாதமாக உள்ளது என்று நேற்று நமது தமிழ் வெப்துனியா டாட் காம் இணையதளத்தில் செய்தி வெளியானது.
 
இந்த தகவல் நடிகர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, அரசியல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பாத நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு தனது தரப்பின் சார்பில், ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில்,  சட்ட மன்ற தேர்தலில் 'இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது ரசிகர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு விருப்பம் போல் வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments