Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பறிமுதல் ரூ.110 கோடி - 500 பேர் கைது: சொல்வது நசிம் ஜைதி

பறிமுதல் ரூ.110 கோடி - 500 பேர் கைது: சொல்வது நசிம் ஜைதி

பறிமுதல் ரூ.110 கோடி - 500 பேர் கைது: சொல்வது நசிம் ஜைதி
, வியாழன், 19 மே 2016 (15:19 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் 110 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனநாயகத்தின் இதயமான தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழக சட்ட மன்ற தேர்தல் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற வாக்குபதிவு மிகவும் திருப்தி அளிக்கிறது.
 
தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழு தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மட்டும் ரூ.110 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் மழையே என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வெற்றி