Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவ வாழ்வு வாழ்வதாக கூறி ஜெயலலிதா மக்களை ஏமாற்றுகிறார் : குஷ்பு தாக்கு

Webdunia
புதன், 4 மே 2016 (16:31 IST)
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு தற்போது திமுக-காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.


 

 
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து, நெல்லை மாவட்டம் களக்காட்டில் பிரச்சரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
மக்களுக்காக நான் என்று கூறும் ஜெயலலிதா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தவ வாழ்வு வாழ்கிறேன் என்று கூறுகிறார். எது தவ வாழ்வு?.. பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்ததுதான் தவ வாழ்வு. ஏனெனில் அவர் மறைந்த போது அவர் விட்டு சென்றது ரூ. 150 மட்டுமே.
 
ஆனால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.113 கோடி. இதற்கு பெயர் தவ வாழ்வா?.. ஜெயலலிதா மக்களை ஏமாற்றுகிறார். அதை யாரும் நம்பக்கூடாது.
 
2011ஆம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றாமல், நிறைவேற்றிவிட்டேன் என்று பொய் சொல்கிறார். அதிமுக பிரமுகர்களின் விடுகளில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள்து.
 
எப்போதும் ஏசியில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு மக்களின் பிரச்சனை எப்படி புரியும்?” என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை தாண்டி வங்கதேசம் வரை ரீச் ஆன தவெக மாநாடு! - விஜய்க்கு இவ்வளவு ஆதரவா?

தர்மஸ்தலா கோயில் மீதான குற்றச்சாட்டுகள்: அரசியல் சதியா? அண்ணாமலை கேள்வி

என் அப்பா தான் அம்மாவை தீ வைத்து எரித்து கொலை செய்தார்.. 6 வயது மகன் வாக்குமூலம்..!

நான் நக்ஸலைட் ஆதரவாளனா? அமித்ஷா குற்றச்சாட்டு குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் விளக்கம்!

135 வினாடிகளில் 999 கார் புக்கிங்: முன்பதிவில் மிரட்டிய மஹிந்திரா BE 6 ‘பேட்மேன்’ கார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments