Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக அதிக இடங்களை பெறும் : கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா?

திமுக அதிக இடங்களை பெறும்  : கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா?
, செவ்வாய், 17 மே 2016 (10:34 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்தில் மொத்தம் 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என்று, வாக்களித்து விட்டு திரும்பியவர்களிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகள் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.
 
அதன்படி, 4 கருத்துக் கணிப்புகள் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று ஒரு கருத்துக் கணிப்பும் கூறியுள்ளது.
 
இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில்,
 
திமுக - 132
 
அதிமுக - 95
 
பாஜக - 1
 
மற்றவை - 6
 
நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 116
 
அதிமுக - 97
 
பாஜக - 0
 
மற்றவை - 21
 
நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 140
 
அதிமுக - 90
 
பாஜக - 0
 
மற்றவை - 4
 
ஏ.பி.பி நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
திமுக - 132
 
அதிமுக - 95

பாஜக - 1
 
மற்றவை -6
 
சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
 
அதிமுக - 139
 
திமுக - 78
 
பாஜக - 0
 
மற்றவை -17
 
இதில், சி ஓட்டர் கருத்துக் கணிப்பு மட்டுமே அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. மற்ற நான்கு கருத்துக் கணிப்புகளும் திமுகவே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.
 
தேர்தலுக்கு முன் வெளியான அனைத்து கருத்துக் கணிப்பிலும், அதிமுகவே அதிக இடங்கள் பெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவே அதிக இடங்கள் பெறும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மக்கள் தீர்ப்பு என்ன என்பது மே 19ஆம் தேதி தெரிந்துவிடும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்குப்பதிவு நிறைவு : தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு