Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலியையும் விட்டுவைக்காத திமுகவினர்

கபாலியையும் விட்டுவைக்காத திமுகவினர்
, செவ்வாய், 3 மே 2016 (11:35 IST)
தமிழக சட்டபேரவைத் தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.


 

இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கட்சித்தலைவர்கள் தமிழகமெங்கும் சூராவளி பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்துக் கட்சிகளுமே சமூகவலைதளங்களில் பிரசாரத்திற்காக அதிக கவனம் செலுத்திவருகின்றன. திமுக பிரச்சார விளம்பரங்களை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றது.

இந்நிலையில் நேற்று முந்தினம் வெளியான ரஜினி நடித்த கபாலி டீஸரையும் தங்கள் பிர்சாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளது. அந்த டீஸரில் ரஜினி பேசும் கபாலின்னா  சினிமால நம்பியாருக்கு அடியாளா வந்து கூனி, குறுகி நிற்பானே... அவன்னு நினைச்சியா கபாலிடா என்று கூறுவார். அந்த வசனத்தை நீக்கி திமுகவினர், எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்யாமல் சென்னையில் மழை வெள்ளம் வந்தப்ப கூட ஹெலிகாப்டர்ல இருந்து பார்த்துக்கிட்டு அம்மான்னு சொல்லிக்கிட்டு அமைச்சர்கள் மாதிரி கூனி குறுகி நிற்பாங்கன்னு பார்த்தியா  திமுகடா என்று கூறுவதுபோல மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத எடியூரப்பா: இது பொய் வழக்கு என கதறல்