Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவினர் இடையே கோஷ்டி மோதல்: சேலத்தில் பரபரப்பு

திமுகவினர் இடையே கோஷ்டி மோதல்: சேலத்தில் பரபரப்பு
, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (12:47 IST)
சேலத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த திமுகவினர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.


 

 
திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். இதில் சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அப்பகுதி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
அறிவிக்கப்பட்ட சில வேட்பாளர்களுக்கு எதிராக தொண்டர்கள் பல்வேறு தொகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சேலத்திலுள்ள அண்ணா சிலைக்கு, திமுகவைச் சேர்ந்த 4 தொகுதி வேட்பாளர்கள் மாலை அணிவிக்க வந்தபோது திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இதில், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil