அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான் : பிருந்தா காரத் தாக்கு

Webdunia
வியாழன், 5 மே 2016 (11:19 IST)
மக்கள் பிரச்சனை அணுகுவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பிருந்தா காரத் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : 
 
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே மாற்று அரசியலை முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்.
 
தமிழகத்தை இதுவரை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளால் எந்த முன்னேற்றமும் இல்லை. சாதிப் பிரச்சனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வேலையில்லா திண்டாடம் ஆகியவற்றுக்கு எதிரக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுப்பதில்லை. அதேபோல்தான் கடந்த காலங்களில் திமுகவும் இருந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லை.  இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
 
வாக்களர்களுக்கு கொடுப்பதற்கான பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. கடைகளின் வழியாக பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. இவற்றை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் கண்டறிந்து தடுக்க வேண்டும்” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

ஜெர்மனி சென்றுவிட்ட ராகுல் காந்தி.. ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தை கலக்கி வரும் பிரியங்கா காந்தி..!

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments