Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் - நடிகை குஷ்பு எங்கே ?

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் - நடிகை குஷ்பு எங்கே ?

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் - நடிகை குஷ்பு எங்கே ?

கே.என்.வடிவேல்

, செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (23:34 IST)
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், அதில் ஸ்டார் வேட்பாளர் நடிகை குஷ்பு பெயர் இல்லாமல் போனதால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

 
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மொத்தம் 41 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, முதல்கட்டமாக 33 பேர் கொண்ட பட்டியலை டெல்லி காங்கிரஸ் தலைமை சற்று முன்பு வெளியிட்டது.
 
இதில் ஆல்ரவுண்டர் என்று வர்ணிக்கப்படும், அகில இந்திய செய்தி தொடர்பாளர்  நடிகை குஷ்பு பெயர் இடம் பெறவில்லை.
 
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில், அதிமுக சார்பில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
 
ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மைலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்  குடியிருக்கும், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், குஷ்பு பெயர் வெளியாகவில்லை.
 
இதனால் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ண் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil