Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்ததால் நடிகர்கள் பிரசாரம் செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்து வருவதால்தான் நடிகர்கள் பிரசாரம் செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (14:55 IST)
அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்து வருகிறது, அதனால்தான் அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் தேவைப்படுகிறது. திமுகவிற்கு அப்படி தேவையில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவைக்குச் சென்றார். முன்னதாக அவர் மீனப்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும்:–
 
கேள்வி : 3 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டீர்கள். மக்கள் ஆதரவு எப்படி உள்ளது?
 
பதில் : ஆட்சி மாற்றம் வேண் டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே 234 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்.
 
கேள்வி : மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமுல் படுத்த முடியும் என்றும் ஒரே கையெழுத்தில் மது விலக்கை கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?
 
பதில் : மிடாஸ் மது ஆலைக்காக அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.
 
கேள்வி : அதிமுகவிற்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்கள் அதிகம்பேர் பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு திமுகவில் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் இல்லையே?
 
பதில் : அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி தேவையில்லை.
 
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பிலுள்ளனர். எனவே தமிழக மக்கள் இதற்கு நல்ல முடிவெடுப்பார்கள். இவ்வாறு அப்போது மு.க.ஸ்டாலின் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments