Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினேகனுக்கு நோஸ்கட் கொடுக்கும் ரைசா - பிக்பாஸ் பரபர

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (12:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகும் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியதற்கு பின், அந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக பிந்து மாதவியை உள்ளே அனுப்பினார்கள். ஆனால், அவரால் எந்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறவில்லை.  
 
அதன் பின், காயத்ரிக்கு உறுதுணையாக இருந்த நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார். அதன் பின் காயத்ரி புரணி பேச ஆளில்லாமல் தவித்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று புரொமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சியினர் வெளியிட்டுள்ளனர். அதில், ரைசா மீது உள்ள கோபத்தில் வையாபுரி எதையோ தூக்கி வீசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ரைசா சினேகனிடம் கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு சினேகன் பொறுமையாக பதில் கூற, ஆத்திரம் அடைந்த ரைசா, இதுபற்றி பேச வேண்டாம்.. தயவு செய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால், சினேகன் அங்கிருந்து கிளம்பி செல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, கடுப்பான ரைசா அங்கிருந்து கிளம்பி செல்கிறார். 
 
கடந்த சில நாட்களாக கோபமாகவே இருக்கிறார் ரைசா. என்னால் சரியாக தூங்க முடியவில்லை. என்னை இங்கிருந்து அனுப்பி விடுங்கள் என பிக்பாஸிடம் சண்டை போட்டார்.  எனவே, போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விடுவார் எனத் தெரிகிறது.
 
இதன் தொடர்ச்சி இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments