சொல்வதெல்லாம் உண்மை ; லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கல்தா? : பரபரப்பு வீடியோ

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:56 IST)
செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


 
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷண் ஜீ. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார். 
 
குடும்பத்தில் உள்ள பிரச்சனை, கள்ளத்தொடர்புகள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்குகிறார். இதில் அவர் பேசும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’,  ‘போலீசுல பிடிச்சு கொடுத்துருவேன்’ என்கிற வசனங்கள் மிகவும் பிரபலமானது.
 
இந்நிலையில், ஜீ தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், நிகழ்ச்சிகாக காத்துக்கொண்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஒருவர் வந்து ‘ உங்கள் மீது ஒரு புகார். எனவே, நீங்கள் நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை’ எனக் கூற, அங்கிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறுகிறார்.
 
இது புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும்.  இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற வாய்ப்பே இல்லை நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments