18 வயது பெண்களுக்கு ரூ.3 லட்சம்! பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்! – விண்ணப்பிப்பது எப்படி?

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:18 IST)
தமிழகத்தில் பிறகும் பெண் குழந்தைகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையில் முன்னதாகவே டெபாசிட் செய்யப்படும் முறைதான் இந்த “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்”. இரண்டு வகைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1 : ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள வீடுகளில் அந்த குழந்தை சார்பில் ரூ.50 ஆயிரம் அரசு டெபாசிட் செய்யும்

திட்டம் 2 : ஒரு பெற்றோருக்கு இரண்டுமே பெண் குழந்தைகளாக இருக்கம்பட்சத்தில் குழந்தைக்கு தலா ரூ.25,000 அரசு சார்பில் டெபாசிட் செய்யப்படும்.

எப்படி செயல்படுகிறது?

இந்த தொகையானது குழந்தைகளின் பெயரில் Tamilnadu Power Finance and Infrastructure Development Corporation Limited – ல் பராமரிக்கப்படும். இந்த தொகைக்கு ஆண்டுதோறும் வட்டிக் கணக்கிட்டு அந்த அக்கவுண்டிலேயே டெபாசிட் செய்யப்படும். பெண் குழந்தை தனது 18 வயதை பூர்த்தி அடைந்ததும் இந்த தொகை ரூ.3 லட்சமாக திருப்பி அளிக்கப்படும். ஒரே பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.25 ஆயிரத்தின் கணக்கில் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கிடைக்கும். இந்த பணத்தை பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்பு மட்டுமே எடுக்க முடியும்.

விண்ணப்பிக்க தகுதி!

விண்ணப்பிக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்.
தாய், தந்தையருக்கு ஒரேயொரு பெண் குழந்தையோ அல்லது இரண்டுமே பெண் குழந்தையாகவோ இருத்தல் வேண்டும். ஆண் வாரிசுகள் இருத்தல் கூடாது.

தேவைப்படும் ஆவணங்கள்:

இந்த திட்டத்தில் இணைய வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ், பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, குடும்ப புகைப்படம், தாய், தந்தையர் யாரவது ஒருவரின் வயதை குறிப்பிடும் சான்றிதழ் ஆகியவை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க அவசியம் தேவை.

விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் சேர குறிப்பிட்ட அந்த குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாக மேற்கண்ட ஆவணங்களின் ஒரிஜினல் மற்றும் நகல்களுடன் அருகில் உள்ள Block Development Office செல்ல வேண்டும். அங்கு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து ஏற்றுக் கொண்ட பின் 2 மாதங்களில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான சான்று வழங்கப்படும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சான்றை கொண்டு இந்த திட்டத்திற்கு Renew செய்ய வேண்டும். மூன்று முறை 15 ஆண்டுகள் ரினீவ் செய்த பின் குழந்தைக்கு 18 வயது ஆகியிருக்கும். அப்போது இந்த தொகை கைக்கு கிடைக்க பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments