வாக்காளர்களுக்கு பணம் : அதிமுகவினர் பாஜகவினர் கைது!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (14:48 IST)
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு. 

 
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.  
 
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு. மேலும், ரூ.46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதோடு, புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம். இதனால், அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் பழனி, சதாசிவம் ஆகியோர் கைது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments