நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம். குற்றாலத்தின் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம் ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒரு தூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில் சாலக்குடி ஆற்றின்...