தேக்கடி ஏரி‌யி‌ல் களைக‌ட்டு‌ம் படகு சவாரி

Webdunia
திங்கள், 22 ஜூன் 2009 (12:22 IST)
தே‌க்கடி ஏ‌ரி‌யி‌ல் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் படகு சவா‌ரி‌, ஏராளமான சு‌ற்று‌ப் பய‌ணிகளை‌க் கவ‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் ஆ‌ண்டு‌க்கு ரூ.21 கோடி வருமான‌ம் ‌கிடை‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெரியாறு அணையின் 8 ஆயிரம் ஏக்கர் நீர்தேக்க பரப்பில் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. இது ஒரு சு‌ற்றுலா‌த் தலமாக ‌விள‌ங்கு‌கிறது.

இங்கு ஏ‌ரி‌யி‌ல் படகு சவா‌ரியு‌ம் ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌ல் சுற்றுலா துறைக்கு சொந்தமான 5 படகுகள், வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகள், தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 படகுகள், கேரள காவ‌ல்துறை‌க்கு சொந்தமான அதிவிரைவு படகு ஒ‌ன்ற ும் உள்ளன.

வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகளிலும் ஒரு சவாரிக்கு 88 பேர் மட்டுமே செல்ல முடியும். அதனால், வனத்துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தலா 80 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 3 படகுகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட ஒரு படகை கடந்த பிப்ரவரியில் வனத்துறை இயக்கியது. மேலும் 2 புதிய படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இந்த 2 படகுகளும் ஒரு நா‌ளி‌ல் தல ா 4 முறை பயணிகளை ஏற்றி செல்லும். அதனால் ந ாளெ ான்றுக்கு 640 சுற்றுலா பயணிகள் கூடுதலாக படகு சவாரி செய்ய முடியும்.

இது குறித்து கேரள அதிகாரி ஒருவர் கூறுகையில், தேக்கடியில் படகு சவாரி மூலம் ஆண்டுக்கு ‌ கி‌ட்ட‌த்த‌‌ட்ட ரூ.21 கோடி வருமான‌ம் ‌கி‌டை‌க்‌கிறது. த‌ற்போது புதிய படகுகளை இயக்குவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும ் என ்று கூ‌றினார‌்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

Show comments