Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி மு‌த‌ல் விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் ர‌யி‌ல் சேவை

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2009 (10:43 IST)
விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை அமை‌க்கு‌ம் ப‌ணிக‌ள் ‌விரை‌வி‌ல் முடிவடையு‌ம். எனவே, த‌மிழக ம‌க்களு‌க்கு பொங்கல் பரிசாக ஜனவரி மாத‌த்‌தி‌ல் இ‌ரு‌ந்து இ‌ந்த ர‌யி‌ல் பாத ையில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று பொது மேலாளர் ஜெயந்த் கூறினார்.

ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் சென்னையில் இருந்து நேற்று சிறப்பு ரயில் மூல‌ம ் விழுப்புரம் வந ்து, அங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், விழுப்புரம்- மயிலாடுதுறை இடையிலான ரயில் பாதை ஆகியவைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. கட்டிட பணிகள், பயணிகளின் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பரிசாக ஜனவரியில் இ‌ந்த பாதை‌‌யி‌ல் ர‌யி‌ல்க‌ளை இய‌க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விழுப்புரம் ரயில் நிலைய கட்டுமான பணி ஜனவரி மாதம் முதல் துரிதப்படுத்தப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்தை முழுவதும் பாதுகாக்கும் அளவிற்கு போதிய ரயில்வே ஊழியர்கள் இல்லாததால் தனியார் ஊழியர்கள் மூலம் பாதுகாப்பினை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. விழுப்புரம்- காட்பாடி இடையே பணிகள் முடிவடைந்து சி.ஆர்.எஸ். ஒப்புதலுக்காக காத்திருக்கின்றோம். புதுச்சேரி ரயில் நேர மாற்றம் என்பது தற்போது முடியாது. டபுள் லைன் போடும்போது நேரங்களை மாற்றி புதுச்சேரி ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments