Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் சண‌ல் பொரு‌ட்க‌ள் க‌ண்கா‌ட்‌சி

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (12:44 IST)
இந்திய ஜவுளித்துறை அமைச்சகம், சணல் உற்பத்தி அபிவிருத்தி குழுமம் இணைந்து சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் மைதானத்தில் சணல் திருவிழாவை நட‌த்‌தி வரு‌கிறது.

எழு‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள கோ-ஆ‌ப்டெ‌க்‌ஸ் மைதான‌த்‌தி‌ல் நே‌ற்று‌த் துவ‌ங்‌கிய இ‌ந்த சண‌ல் க‌ண்கா‌ட்‌சி ம‌ற்று‌ம் ‌வி‌ற்பனை நிகழ்ச்சி 18-ந் தேதி வரை நடைபெறு‌கிறது. இதில், சணல் தயாரிப்பு பொருட்கள், அழகிய சணல் ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சி‌யி‌ன் ஒரு பகுதியாக, விதவிதமான சணல் ஆடைகளை அழகிகள் அணிந்து வரும் அணிவகுப்பு நிகழ்ச்சியு‌ம் நடைபெற்றது.

4 நா‌ட்க‌ள் நடைபெறு‌ம் இ‌ந்த க‌ண்கா‌‌ட்‌சி‌யி‌ல் சணலா‌ல் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ஆடைக‌ள், பைக‌ள், கை‌வினை‌ப் பொரு‌ட்க‌ள் போ‌ன்ற ப‌ல்வேறு பொரு‌ட்க‌ள் ‌வி‌ற்பனை‌க்கு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 20 ‌விழு‌க்காடு வரை த‌ள்ளுபடியு‌ம் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ``தென் இந்தியாவில் முதல்முறையாக சணல் திருவிழா நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது. சணல் என்றாலே கோணி தயாரிக்க மட்டும்தான் உதவும் என்று நினைக்கிறோம். ஆனால், அதிலும் பருத்தியை போன்று ஆடைகள் தயாரிக்க முடியும். அதை மக்களிடம் எடுத்துக் கூறு‌ம் வகை‌யி‌ல் ‌இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி அமையு‌ம்'' என்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments