செந்தூர் ர‌யி‌ல் ஸ்ரீவைகுண்டத்தில் நிற்கும்

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (12:04 IST)
பயணிக‌ளி‌ன் கோரிக்கையை ஏற்று செந்தூர் ‌விரைவு ரயில் நாளை முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது கு‌றி‌த்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்‌பி‌ல், சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும், செந்தூர் வாராந்திர ‌விரைவு ரயில், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே உள்ள பகுதியான ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய ஊர்களில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஏற்று, நாளை முதல் திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் வரும் ‌விரைவு ரயில் குரும்பூர், ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் ரயில் நாளை மறுதினம் முதல் ஸ்ரீவைகுண்டம், குரும்பூரில் நின்று செல்லும்.

எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ‌விரைவு ரயில் (6713 / 6714) நாளை மறுதினம் முதல் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்று செல்லும் எ‌ன்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

Show comments