Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனம் - மாசி மாத பலன்கள்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:30 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரக நிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில்  சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், சனி - லாப  ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
வரவும், செலவும் சரியாக பயன்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை  செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால்  அடுத்தவர்களிடம்  சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது.  வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.   அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
 
தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம்  தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது  முன்னேற்றத்துக்கு உதவும்.
 
குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.
 
பெண்களுக்கு எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக  இருக்கும்.
 
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது  நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
 
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த  கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் உடல்நிலையிலும் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும்  பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு ஏற்படும். புத்திரவழியில் வீண்செலவுகள் உண்டாகி மனநிம்மதி குறையும்.
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி ஒற்றுமை குறையும்.  உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்துவார்கள். ஆதலால கவனமாக இருக்கவும்.
 
ரேவதி:
 
இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்  தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். வேலைப்பளு அதிகரிக்கும்.
 
பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை,  தாமதம் நீங்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி18, 19
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி24, 25.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்