மீனம்: ஆடி மாத ராசி பலன்கள்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (14:28 IST)
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி - கிரகநிலை: சுகஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.  பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு  பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.
 
பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.
 
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது  அவசியம்.
 
கலைதுறையினர்  சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.
 
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி  கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்
 
உத்திரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை  கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன்  மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால்  வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.
 
ரேவதி: இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம்  உண்டாகும்.
 
பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 1, 2.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments