Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதுனம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran
சனி, 15 நவம்பர் 2014 (14:44 IST)
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதைத் தருபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2&ல் குரு நிற்பதால் சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் வீட்டு திருமணத்தையும் நல்ல முறையில் நடத்திக் கொடுத்து செஞ்சோற்றுக் கடனைத் தீர்ப்பீர்கள். நாசூக்காகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. உங்களுடைய ராசிநாதன் புதன் சற்று பலவீனமாக காணப்படுவதால் வேலைச்சுமை, அலைச்சல், தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

முக்கியமான காரியங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்களை சிலர் விமர்சித்துப் பேசினாலும் உங்கள் மீது வீண் பழி சுமத்தினாலும் அதற்காக கோபப்படாதீர்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உறவினர், நண்பர்களுக்குள் வரும் சண்டையிலும் நீங்கள் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்ரன் 6&ல் நிற்பதால் கணவன்&மனைவிக்குள் கருத்து மோதல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுற்றல், வயிற்று வலி வந்து நீங்கும்.

ஆனால் 7&ந் தேதி முதல் சுக்ரன் 7&ம் வீட்டில் அமர்வதால் கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. மனஇறுக்கங்கள் நீங்கும். கல்யாண முயற்சிகளும் பலிதமாகும். உங்களுடைய ராசிக்கு 7&ல் அமர்ந்துக் கொண்டிருக்கும் செவ்வாய் 22&ந் தேதி முதல் 8&ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், தீக்காயங்களும் ஏற்படக்கூடும். மின்சாரத்தை கவனமாக பயன்படுத்துங்கள். சகோதரங்களுடன் மோதல் வரும். பழைய வழக்கில் எச்சரிக்கையாக இருங்கள். ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சூரியன் 6&ம் வீட்டில் நுழைந்திருப்பதால் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. சனி 5&ம் வீட்டில் நிற்பதால் கனவுத் தொல்லை அதிகரிக்கும். கன்னிப் பெண்ளே! மாதத்தின் முற்பகுதி சற்று மந்தமாக இருக்கும். பிற்பகுதியில் நல்லது நடக்கும். திருமணம் ஏற்பாடாகும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.

புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன நட்டங்கள் வந்துப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சக ஊழியர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் தள்ளிப் போகும். அலைச்சலும், செலவுகளும் அதிகரித்தாலும் தன்னம்பிக்கையால் சமாளிக்கும் மாதமிது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments