Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துலாம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran
சனி, 15 நவம்பர் 2014 (14:31 IST)
எதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்களே! உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் வலுவாக நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தடைகற்களையெல்லாம் உடைத்தெறிவீர்கள். தன்னம்பிக்கை பெருகும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகையும் கைக்கு வரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். 7&ந் தேதி முதல் சுக்ரன் 3&ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமை இருக்கும்.

சுக்ரன் சூரியன் சேர்க்கை 6&ந் தேதி வரை இருப்பதால் மூத்த சகோதர வகையில் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். சளித் தொந்தரவு, தொண்டை வலி வந்து நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியும், பாக்யாதிபதியுமான புதன் வலுவான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் கடந்த மாதத்தை விட இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். செல்வாக்குக் கூடும். கோபத்தை மறந்து பொறுமையுடன் எல்லோரிடமும் பேசி காரியம் சாதிப்பீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தையாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

நட்பு வட்டம் விரிவடையும். பள்ளிப் பருவம், கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால் வேலைச்சுமை, மனஇறுக்கம், கண் வலி, பல் வலி வந்துப் போகும். மறதி உண்டாகும். பெரிய நோய்கள் இருப்பதைப் போல சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்துக் கொண்டேயிருக்கும். ஒரு கடனை அடைத்தால் புதிய கடன் உருவாகும். பழைய பிரச்னைகளை அவ்வப்போது நினைத்து குழம்புவீர்கள். குரு 10&ல் நீடிப்பதால் எந்த நேரம் எந்தப் பிரச்னை வருமோ, இதுவரை சேர்த்து வைத்த கௌரவத்தையும், மரியாதையையும் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயம் வரும்.

உங்களை விட வயதில் குறைவானவர்களின் விமர்சனங்களையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். சூரியன் 2&ம் வீட்டில் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செவ்வாய் செல்வதால் பணவரவு உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்திற்கு பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்களின் கிரகப் பிரவேசம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். ராகு 12&ல் இருப்பதால் தூக்கம் குறையும். கடந்த கால கசப்பான அனுபவங்கள் நெஞ்சில் நிழலாடும்.

செய்நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது பெருமூச்சுவிடுவீர்கள். கன்னிப் பெண்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் பாசத்தை இந்த மாதத்தில் உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். இ&மெயில், எஸ்.எம்.எஸ்சில் தொடர்புக் கொள்ளும் போது கவனமாக வார்த்தைகளை கையாளுங்கள். வியாபாரத்தில் மாறுபட்ட சிந்தனையால் லாபம் ஈட்டுவீர்கள். 6&ல் கேது நிற்பதால் புது முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பழைய நண்பர்கள் மூலமாக வியாபாரத்தை விரிவுப்படுத்த உதவிகள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஏழரைச் சனி நடப்பதால் நான்கு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் இரண்டு நாட்கள் மந்தமாக இருக்கும். ஆனாலும் பயந்துவிடாதீர்கள். உத்தியோகத்தில் ஓடி ஓடி உழைத்தாலும் நல்லப் பெயர் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகள் ஒத்துழைத்தால் சக ஊழியர்கள் முரண்டுப் பிடிப்பார்கள். இப்படி மாறி மாறி பிரச்னைகள் அலுவலகத்தில் வரும். சென்ற மாதத்தை விட இந்த மாதத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். புது வேலை மாறுவது சம்பந்தமாக இப்போது அவசரம் வேண்டாம். அடுத்த மாதத்தில் பார்த்துக் கொள்ளலாம். இருக்கின்ற வேலையில் பிரச்னை வராமல் சமாளிப்பது நல்லது. கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த நீங்கள் இந்த மாதத்தில் உற்சாகமடைவீர்கள். புதிய வாய்ப்புகள் வரும். வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதால் முன்னேறும் மாதமிது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments