Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதுனம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran
வியாழன், 16 அக்டோபர் 2014 (14:54 IST)
சொகுசு வாழ்க்கையை விரும்பாத நீங்கள், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுவீர்கள். உங்கடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கழுத்து வலி, முதுகு வலி குறையும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். கடந்த ஒருமாத காலமாக நீச்சகதியில் நின்றிருந்த உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு கிடைக்கும்.

வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி, வகை கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் குரு நிற்பதால் அழகு, இளமைக் கூடும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை சிக்கல்களும் வந்துப் போகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் நிம்மதி குறையும். கெமிக்கல், மருந்து, மர வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உத்யோக ஸ்தானத்தில் கேது நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். சில சூட்சுங்களை உணர்வீர்கள். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே! எதிர்பார்த்தபடி உங்களுடைய படைப்புகள் வெளியாகும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் மாதமிது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments