என்ன ஒரு பிரம்மாண்டம்! அக்ஷயகுமாரின் 'கேசரி 'டிரெய்லர் வெளியானது...

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:08 IST)
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடத்துள்ள கேசரி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 


 
1897 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை எதிர்த்து வெறும் 21 சீக்கியர்கள் திறம்பட போரிட்டனர். இந்த போர் சஹார்க்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த போரில் ஹவில்தார் இசார் சிங் மிக கடுமையாக அதேநேரம் நேர்த்தியாக சண்டை இட்டார்.
 
இந்த உண்மை கதையை மையமாக வைத்து கேசரி என்ற பெயரில் படம் உருவாகி உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷயகுமார் ஹவில்தார் இசார் சிங் வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரணிதி சோப்ரா நடித்துள்ளார். கேசரி என்றால் இந்தியில் சிங்கம் என பொருள். 21  சீக்கிய சிங்கங்கள் எப்படி 10 ஆயிரம் வீரர்களுடன் போரிட்டனர் என்பதை மையமாக வைத்து கேசரி படம் உருவாகியுள்ளது. தற்போது கேசரி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் பிரம்மாண்டமாகவும், அற்புதமாகவும் உருவாக்கி உள்ளார்கள். இதனால் படம் குறித்து மிகுந்த எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
அணுராக் சிங் இப்படத்தை இயக்கி உள்ளார். தர்மா புரொடக்ஷன் சார்பில் கரண் ஜோகர் தயாரித்து உள்ளார். தனிஷ் பாகஷ்சி சிறப்பாக இசையமைத்துள்ளார். அண்சுயல் சோபி அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
கோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி கேசரி படம் வெளியாகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments