நம்பர் 1 ட்ரெண்டிங்கில் நிபா "வைரஸ்" ட்ரைலர்!

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (10:20 IST)
வைரஸ் திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வலம் வந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. 


 
மருத்துவ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள மலையாள திரைப்படமான "வைரஸ்" படத்தை இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஞ்சாக் பாபா, ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இண்டிரைத் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கால்லிங், ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.   இப்படத்திற்கு  ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
வைரஸ் திரைப்படம் 2018 ம் ஆண்டில் கேரளாவை உலுக்கியெடுத்த   நிபா வைரஸ் (Nipah)  தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முஹ்சின் பரிரி, ஷார்பூ மற்றும் சுஹாஸ் ஆகியோர் இப்படத்தின் கதையை வடிவமைத்துள்ளனர் . படத்தை ஆஷிக் அபுவின் மனைவியும் நடிகையுமான  ரீமா கல்லிங் தயாரிக்கிறார்.
 
வருகிற ஜூன்  7-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு யுடியூபில்  ரெண்டிங்கில் வலம் வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments