Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 12 லட்சம் பேர் பார்த்த சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ - டீஸர்

ஒரே நாளில் 12 லட்சம் பேர் பார்த்த சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ - டீஸர்
, வெள்ளி, 29 மே 2015 (22:13 IST)
சல்மான் கான், கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 
சல்மான் கான், கரீனா கபூர், நவாஸ்கான் சித்திக் ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’பஜ்ரங்கி பாய்ஜான்’. இப்படத்தை கபிர் கான் இயக்கியுள்ளார். சல்மான் கான் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ப்ரிதம் இசை அமைத்துள்ளார்.
 

 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் ஷாருக் கான் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமீர்கானும் கலந்து கொண்டனர். ஒரு முன்னணி நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கு மற்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வது பெரும்பாலும் அபூர்வமான செயலாகும்.
 
இந்த திரைப்படத்தின் டீஸர் நேற்று வியாழன் அன்று [28-05-15] வெளியிடப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலைக்குள் அந்த திரைப்படத்தின் டீஸரை 12 லட்சம் 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
 
டீஸர் கீழே:
 
 
 

 

Share this Story:

Follow Webdunia tamil