வெற்றி அடையுமா? பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை... ட்ரைலர் பார்த்திட்டு சொல்லுங்க..!

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:48 IST)
பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து தெலுங்கு ரீமேக் பணிகள் தொடக்கம்… எந்தந்த கதாபாத்திரங்களில் யார் யார்?

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்… திடீரெனப் பரவும் தகவல்!

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments