சினிமா ரசிகர்களின் பேவரைட் ‘ஜல்லிக்கட்டு’ இப்போது தமிழில்… பிரபல ஓடிடியில்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (14:38 IST)
இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு  திரைப்படம் 2019 ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன்  ஆகியோர்  நடித்திருந்தனர்.

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியானாலும் மொழி தாண்டி சினிமா ரசிகர்களால் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த திரைப்படம் தமிழில் டப் ஆகி அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு சினேகா கொடுத்த பதில்.. பிரசன்னாவின் ரியாக்‌ஷன்

‘ஜனநாயகன்’னு பேர் வச்சு கடைசில இததான் சொல்ல வர்றாங்களா? சம்பந்தமே இல்லையே

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

'ஹார்ட் பீட்' தொடரில் நடித்த நடிகருக்கு திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments