Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களின் வாய் வார்த்தையை விட பெரிய ப்ரமோஷன் கிடையாது… 7 நாட்களில் மஞ்சும்மல் பாய்ஸின் கலெக்‌ஷன் இவ்வளவா?

vinoth
சனி, 2 மார்ச் 2024 (07:01 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் பல நாஸ்டால்ஜிக்கான தருணங்களை நினைவுப் படுத்தியுள்ளனர். குறிப்பாக படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். இதையடுத்து படத்துக்கு தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பெரியளவில் ப்ரமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. ஆனாலும் படம் பார்த்த ரசிகர்களின் பாராட்டுதல் மூலமே பெரியளவில் ப்ரமோட் ஆன இந்த படம் 7 நாட்களில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் ரிலீஸில் தாமதம்..!

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments