Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா மீதான விமர்சனங்கள் என்னை பாதிப்பதில்லை – யுவன் ஷங்கர் ராஜா பதில்!

vinoth
வியாழன், 25 ஜூலை 2024 (08:31 IST)
தமிழ் சினிமாவில் தன்னுடைய 16 ஆவது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. 90ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான இசையமைப்பாளாராக இருக்கும் யுவன் தற்போது விஜய்யின் கோட் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நாளை மறுநாள் சென்னை YMCA மைதானத்தில் யுவன் லாங்க் ட்ரைவ் என்ற இசைக் கச்சேரியை நடத்துகிறார். அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது ‘அவரது தந்தை இளையராஜா எம் பி ஆனதற்குப் பிறகு நிறைய விமர்சனங்கள் அவர் மேல் வைக்கப்படுகிறதே’ என்ற கேள்விக்கு பதிலளித்தார் “அதில் விமர்சனங்கள் எதுவும் என்னைப் பாதிப்பதில்லை. விமர்சனங்களைக் கேட்டு அதில் நல்ல விஷயங்கள் இருந்தால் எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும். என்னை சுற்றி நல்லவர்கள் உள்ளார்கள். அதனால் விமர்சனங்கள் என்னை பாதிக்காது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments