Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தளபதி 68” முதல் பாட்டு இதுதான்..! மாஸ் அப்டேட் குடுத்த யுவன்!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (11:45 IST)
வெங்கட் பிரபு இயக்க உள்ள விஜய்யின் 68வது படத்தின் பாடல் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாக தொடங்கியுள்ளன. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வெங்கட் பிரபு சிம்புவை வைத்து டைம் லூப்பில் மாநாடு ஹிட் குடுத்தது போல விஜய்க்கு ஒரு ஏலியன் கதையை எழுதி வைத்திருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

நடிகர் விஜய்யின் படங்களுக்கு அரிதாகவே யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதிய கீதைக்கு பிறகு மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் சங்கர் ராஜா, தளபதி 68 படத்தின் முதல் பாடல் தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் பாடல்கள் குறித்து ஏற்கனவே வெங்கட் பிரபுவும், யுவனும் பேசி விட்டதாகவே தெரிகிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments