Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் இசையமைப்பாளர்களுக்காக ஆடியோ நிறுவனம் தொடங்கிய யுவன்

Webdunia
வியாழன், 21 மே 2015 (10:05 IST)
தமிழ் சினிமாவின் ஆடியோ விற்பனை பல ஆண்டுகளாக பாதாளத்தில்தான் உள்ளது. இசையமைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் தரும் சம்பளத்தில் சிறு பகுதிகூட, ஆடியோ உரிமை விற்பனையால் திருப்பி கிடைப்பதில்லை.
 
ஆடியோ நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இசை உரிமையை ஏன் தர வேண்டும் என்று விஷால், ஞானவேல்ராஜா போன்றவர்கள் சொந்தமாக ஆடியோ நிறுவனம் தொடங்கி தங்கள் படத்தின் இசையை தாங்களே வெளியிடுகின்றனர்.
 
ஆனால், இசையமைப்பாளர் யுவன் தொடங்கியிருக்கும், யுவன்1 என்ற ஆடியோ நிறுவனம் சற்று வித்தியாசமானது. இதன் மூலம் இளம் இசையமைப்பாளர்களின் தனி ஆல்பங்களையும் வெளியிட இருக்கிறார். சினிமாவுக்கு வெளியே இசையார்வத்துடன் இயங்கும் இளைஞர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த நிறுவனம் ஒரு வாசலாக அமையும்.
 
வாழ்த்துகள் யுவன்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments