Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுவன் சங்கர் ராஜாவே அடுத்த இளையராஜா : இயக்குனர் சீனுராமசாமி

யுவன் சங்கர் ராஜாவே அடுத்த இளையராஜா :  இயக்குனர் சீனுராமசாமி
, திங்கள், 14 டிசம்பர் 2015 (18:17 IST)
தமிழ் சினிமாவின் அடுத்த இளையராஜா அவரது மகன் யுவர் சங்கர் ராஜாதான் என்று தமிழ் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் “தர்மதுரை”. விஜய் சேதுபதி இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மேலும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
 
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி மீண்டும் கை கோர்த்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை பற்றி  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சீனு ராமி  “ தர்மதுரை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தந்திருக்கும் பாடல்களை கேட்டு மயங்கினேன். அடுத்த இசைஞானி யுவன் சங்கர் ராஜாதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil