Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை அப்டேட்தான வேணும்? இந்தாங்க..! – பாடல் அப்டேட் கொடுத்த யுவன்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:49 IST)
விஜய் பிறந்தநாளில் பீஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வலிமை பாடல் குறித்த அப்டேட் வழங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் தொடங்கி பல காலமாகிவிட்ட நிலையில் விஜய்யின் பிகில், மாஸ்டர் படங்கள் முடிந்து பீஸ்ட் பணிகளும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் அப்டேட் கிடைக்குமா கிடைக்காதா என அஜித் ரசிகர்கள் மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூரை வறுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று க்ளப்ஹவுஸில் மாநாடு சிங்கில் ரிலீஸில் பேசிய யுவன் சங்கர் ராஜா “வலிமை” படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் தான் இயற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2006ல் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் அம்மா செண்டிமெண்ட் பாடல் இடம்பெறவில்லை என்பதால் இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே சிறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

பெண்களின் தயக்கமும் பயமும்தான் தவறுகளுக்குக் காரணமாக அமைகிறது… நடிகை பவானி ஸ்ரீ கருத்து!

ஸ்லீப்பர் ஹிட் DNA படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments