பார்த்திபன் - கெளதம் கார்த்திக் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (18:42 IST)
பார்த்திபன் - கெளதம் கார்த்திக் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் எழில். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து வருகின்றனர்
 
அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள இந்த படத்திற்கு ’யுத்த சத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் சாய்பிரியா என்பவர் நாயகியாக நடிக்க வருகிறார் என்பதும் ரோபோ சங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments