Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெறி படத்தின் டீஸர் யூடியூப் தளத்தில் 1 மணி நேரம் நீக்கம்: விஜய் அதிர்ச்சி

தெறி படத்தின் டீஸர் யூடியூப் தளத்தில் 1 மணி நேரம் நீக்கம்: விஜய் அதிர்ச்சி
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (15:07 IST)
விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் டீஸர் யூடியூப் தளத்தில் இருந்து காப்புரிமை காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது.


 
 
நடிகர் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் தெறி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருக்கிறார். மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளிவரும் 50வது படமாகும்.

'தெறி' படத்தின் டீஸர் நீக்கம்
 
படக்குழுவினர் திட்டமிட்ட படி, தெறி படத்தின் டீஸரை யூடியூப் தளத்தில் நேற்று இரவு 12 மணியளவில் வெளியிட்டனர். இதையடுத்து, படத்தின் டீஸர் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், படத்தின் டீஸருக்கு யூடியூப் தளத்தில் லைக் செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருந்தது.  

இந்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் திடீரென தெறி படத்தின் டீஸரை யூடியூப் வலைதளம் நீக்கியுள்ளது. படத்தின் டீஸரில் உள்ள 'கன்டென்ட்' சிலவற்றுக்கு வேறொரு தளம் காப்புரிமை கோரியதால் நீக்கப்பட்டதாக யூடியூப் தளம் தெரிவித்தது. 

டீஸர் மீட்பு
 
இதையடுத்து, படக்குழுவின் தொழில்நுட்ப பிரிவி யூடியூப் தளத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, கன்டென்ட் பிரச்சணையால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, பின்னர், படத்தயாரிப்பு தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளித்த பின்பு  சுமார் ஒரு மணி பிறகு மீண்டு தெறி டீசரை பதிவேற்றம் செய்யப்பட்டது. 

விளக்கம்
 
இதுகுறித்து யூடியூப் தொழில் நுட்ப வல்லுனர் ஒருவர் கூறுகையில், "வழக்கமாக, பட டீஸர், ட்ரெய்லர்கள் பிரபல ஆடியோ நிறுவனங்களின் அதிகாரபூர்வ கணக்கில் இருந்து யூடியூபில் பதிவேற்றப்படும். ஆனால், தெறி படத்தின் டீஸர், கலைப்புலி எஸ் தாணு பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பக்கத்தின் உள்ளடக்கத்தில் காப்புரிமை குறித்த சந்தேகம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம்" என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil