என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள் - கமல்ஹாசன் உருக்கம்

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (12:50 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், நடன கலைஞர், அரசியல் கட்சித்தலைவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிஞர் எனப் பன்முகக் கலைஞராகப் பரிமளிக்கிறார்.

இவர் நேற்று தன் 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நேற்று முன்தினம் சென்னை லீலா பேலஸில்  அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், சூர்யா, அமீர்கான்,  உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.  அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,  ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறினர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும்  நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், ‘’எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்’’ என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments