Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கண்டிப்பா உங்களை ஒரு படத்தில் இயக்குவேன்…” யோகி பாபுவுக்கு உறுதியளித்த கௌதம் மேனன்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:52 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது “சிம்பு சார் சிங்கிள் ஷாட் ஆர்ட்டிஸ்ட். அவருடன் நான் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தேன். இயக்குனர் கௌதம் மேனன் சாருக்கு நான் மின்னலே படத்தில் இருந்தே ரசிகன். அவர் மண்டேலா படம் பார்த்துவிட்டு ‘கண்டிப்பாக உங்களை ஒரு படத்தில் இயக்குவேன்” எனக் கூறினார்.  மண்டேலா படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்த முதல் நபர் நீங்கள்தான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

கமல்ஹாசன் நிறுவனத்துக்குப் படம் இயக்குனர் அருண்குமார்… ஹீரோ யார்?

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments