Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீசுக்கு சில மணி நேரம் முன் நல்ல செய்தியை பெற்ற 'எமன்'

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (22:50 IST)
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம்




ஏற்கனவே கடந்த ஆண்டு 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி இம்முறை லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள 'எமன்' திரைபடத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைத்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும் இனிப்பான ஒரு செய்தியாக உள்ளது.

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நான்', அமரகாவியம்' போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments