Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:09 IST)
தனுஷ் நடித்த புதுப்பேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 40.
 
தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
 
நடிகர் ஜெயசீலன் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தான் அவர் வாழ்ந்து வந்ததாகவும் 40 வயது ஆகியும் அவர் திருமணம் செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டதும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரை உலகின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments