மீண்டும் தொடங்கிய யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ ஷூட்டிங்.. மும்பையில் முகாமிட்ட படக்குழு!

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:40 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷின் அடுத்த படமான டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதனைப் படக்குழு மறுத்துள்ளது. திரைக்கதை சம்மந்தமாக இயக்குனருக்கும் யஷ்ஷுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தததாகவும் அதை இப்போது இருவரும் பேசி சரிசெய்துகொண்டுவிட்டு அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பையில் இப்போது கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறாராம் கீது மோகன்தாஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments