Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட ரிலீஸ்!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (07:47 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் நேற்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாஷ் கே ஜி எஃப் கெட்டப்பிலேயே பார் ஒன்றுக்குள் நடந்து செல்வது போலவும், பெண்களின் கவர்ச்சி நடனம் இடம்பெறுவது போலவும் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் தற்போது படத்தின் ரிலீஸ் கிட்டத்தட்ட ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்