Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படமும் ஒரு பீரியட் படமா? செட் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

vinoth
புதன், 3 ஜூலை 2024 (10:05 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை யாஷ் தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கதை கேட்ட அவர் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படம் 1950 கள் மற்றும் 70 காலகட்டத்தில் நடக்கும் ஒரு படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் ஷூட் தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments