Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யாஷ்!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யாஷ்!
vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:36 IST)
நடிகர் யாஷ் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் எதிர்பாராத காரணத்தினால் மின்சாரம் ஷாக் அடித்து பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் யாஷ் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முயன்றனர். அப்போது கட் அவுட் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் கம்பிகளும் பேனரில் இருந்த இரும்புக் கம்பிகளும் உரசியதில் மின்சாரம் தாக்கி ஹனுமந்த் ஹரிஜன், முரளி நடுவினாமணி மற்றும் நவீன் காஜி என்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து இளைஞர்களின் உடல்கள் அவர்கள் வீடுகளில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் யாஷ்.பின்னர் பேசிய யாஷ் “நடிகர்களுக்காக ரசிகர்கள் தங்கள் உயிரை விடக் கூடாது. பொறுப்புடன் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments