Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் தயாரிப்பாளருக்கு செக்ஸ் டார்ச்சர்; சினிமா மீடியேட்டருக்குச் செருப்படி

பெண் தயாரிப்பாளருக்கு செக்ஸ் டார்ச்சர்; சினிமா மீடியேட்டருக்குச் செருப்படி
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (15:30 IST)
'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் பெண் தயாரிப்பாளர் இந்து, அப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்குத் திரையரங்குகளை 'புக்' செய்யும் மீடியேட்டராக சிவா என்பவரை வேலைக்குச் சேர்த்தார். 
 
திடீரென்று கடந்த சில நாட்களாக நடு இரவில் இந்துவுக்குச் சிவா போன் செய்து 'செக்ஸ்' டாச்சர் கொடுத்திருக்கிறார். 
 
பொறுத்துப் பார்த்த இந்து, நேரில் அழைத்து சிவாவைக் கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைச் சிவா கட்டிப் பிடித்து முத்தமிட முயன்றிருக்கிறார். இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து, சிவாவைச் செருப்பால் அடித்து விரட்டியிருக்கிறார்.
 
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா மீது புகார் (FIR) பதிவு செய்திருக்கிறார். இதையறிந்த சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு ஃபோன் செய்து, படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துத் தலைமறைவாகி விட்டார். 
 
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார். காவல் துறை கைது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் சில காட்சிகள் அடுத்த பக்கத்தில்

'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் சில காட்சிகள் இங்கே-

webdunia


webdunia


webdunia

Share this Story:

Follow Webdunia tamil