சசிக்குமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அதன் இயக்குனர் தனது தோழிக்கு ப்ரபோஸ் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “டூரிஸ்ட் பேமிலி”. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் குடும்பத்தை மையமாக கொண்டு முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனது தோழிக்கு காதலை சொல்லியுள்ளார். மேடையில் பேசிய அவர் “எனக்கு பல காலமாக உறுதுணையாக நின்று வரும் அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 6வது படிக்கும்போதிருந்தே தெரியும். 10வது முதலாக நாம் இருவரும் நெருக்கமான நண்பர்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. உன்னிடம் ஒன்றுதான் கேட்கவேண்டும் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டார். இதனால் அவரது தோழி இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி, கண் கலங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K