Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

vinoth
புதன், 9 ஜூலை 2025 (10:31 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆறு முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபிகா படுகோன் மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்கவைக்க ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மற்றொரு நடிகரான டுவைன் ஜான்சனிடமும் ( தி ராக்) தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments