10 ஆண்டு தடைவிதித்த ஆஸ்கர் அகாடெமி… வில் ஸ்மித்தின் பதில்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:24 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் அகாடமி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.

விழா மேடைக்கு சென்ற தொகுப்பாளரை தாக்கியதால் இந்த நடவடிக்கை என்றும் அகாடமி விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாக தற்போது வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது சம்மந்தமாக அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments