Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பிறந்தநாளில் அந்த படத்தை ரிலீஸ் செய்யுங்கள் – தயாரிப்பாளருக்குக் கோரிக்கை வைத்த வெங்கட்பிரபு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (17:50 IST)
அஜித் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை மே 1 அஜித் பிறந்தநாளில் ரிலிஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் வெங்கட்பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.

வெங்கட்பிரபு சென்னை 28 ,சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

இந்நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக பழைய ஹிட் படங்கள் ரி ரிலிஸ் செய்யப்படும் நிலையில் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை மே 1 அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்யுங்கள் என்று அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியிடம் வெங்கட் பிரபு கோரிக்கை வைத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments