Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்? கார்த்திக் சுப்பராஜ் அளித்த விளக்கம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:47 IST)
மகான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வாணி போஜன். ஆனால் அவர் காட்சி ஒன்று கூட படத்தில் இடம்பெறவில்லை.

விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற்றும் சிம்ரன் நடிப்பில் இன்று வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இது எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்றமாக படத்தில் வாணிபோஜனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு முக்கியமான வேடம் எனவும் படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். ஆனால் படத்தில் இன்று ஒரு காட்சியில் கூட வாணிபோஜனைக் காணவில்லை. இது குறித்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மீம்ஸ்களாகவும் ட்ரோல்களாகவும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வாணி போஜன் காட்சிகள் பற்றி பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இரண்டாம் பாதியில் விக்ரம்மின் காதலியாக வாணி போஜன் சில காட்சிகள் படமாக்கி இருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரின் மீதிக் காட்சிகளைப் படமாக்க முடியவில்லை. அதனால் எடுத்த சில காட்சிகளை நீக்கினோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments